மதபோதகர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், சடலமாக கண்டெடுப்பு-வீடியோ
நெல்லை: கிறிஸ்தவ மத போதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம் பெண் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோஷ்வா ஜோஷ்வா இம்மானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மதபிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நெல்லை மாவட்டம், தாழையூத்து அடுத்த பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த அனுஷ்யா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரோடு உல்லாசமாக இருந்து அதை ஜோஷ்வா வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், நகைகளை பறித்துக்கொண்டதாகவும், தாழையூத்து காவல் நிலையத்தில் அனுஷ்யா புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பாப்பான்குளம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் அனுஷ்யா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் அவமானத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications