மதுரை காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த பெண் காவலரின் கணவர் சரண்!
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் கருப்பாயியின் கணவர் திருச்சி போலீஸில் சரணடைந்துள்ளார். இதற்கிடையே, கருப்பாயி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புதுப் புகாரைக் கூறியுள்ளனர்.
மதுரை, திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் கருப்பாயி (28). இவர் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் பெத்தண்ணசாமி (32) என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெத்தண்ணசாமி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் பெத்தண்ணசாமி ஊருக்கு வந்தார். அப்போது அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கருப்பாயியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். விடுமுறை முடிந்தும் அவர் பணிக்குத் திரும்பவில்லை. வீட்டிலேயே இருந்தார். தினமும் குடித்தார். மனைவியுடன் சண்டை போட்டு வந்தார். இதனால் கருப்பாயி பெரும் வேதனையிலும், மன உளைச்சலிலும் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் இன்று காலையில் காவல் நிலையத்தில் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் கருப்பாயி. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பாயி மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் புகார்
இந்த நிலையில் கருப்பாயி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் பிரச்சினை எழுப்பியுள்ளனர். கருப்பாயி பயன்படுத்திய துப்பாக்கி காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியாகும். அது எப்படி கருப்பாயிக்கு கிடைத்தது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சந்தேகத்தை எழுப்பி அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். உடலையும வாங்க மறுத்தனர்.
திருச்சி போலீஸில் சரணடைந்த கணவர்
இதற்கிடையே கருப்பாயியின் கணவரான பெத்தண்ணசாமி, திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications