கணவருடன் சேர்ந்து வைக்க கோரிக்கை... விடிய விடிய வீட்டு வாசலில் தர்ணா நடத்திய புதுப்பெண்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருமணமாகி 5 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தி விட்டு சென்ற கணவருடன் சேர்த்து வைக்க கோரி புதுப்பெண் தனது கணவரின் வீட்டு வாசலில் விடிய விடிய தர்ணா செய்து வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே கழுகுமலையை சேர்ந்த முத்துபாண்டி மகள் மகாலெட்சுமி. முத்துபாண்டி 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகாலெட்சுமி அவரது தாய் பரமாரிப்பில் பிஎஸ்சி வரை படித்துள்ளார். கழுகுமலை அருகே உள்ள செந்தில்குமார் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமான பணியில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

செந்தில்குமாரும், மகாலட்சுமியும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மத்துடன் இருவருக்கும் கடந்த மாதம் 13ம் தேதி திருணம் நடந்தது. திருமணமாகி முதல் 5 நாட்கள் இருவரும் மகாலெட்சுமி வீட்டில் தங்கியிருந்தனர். பின்னர் செந்தில்குமார் மனைவியை அங்கேயே விட்டு விட்டு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு அவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் மகாலெட்சுமியை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாலெட்சுமியின் தாய் மற்றும் உறவினர்கள் செந்தில்குமார் வீ்ட்டுக்கு சென்று விபரம் கேட்டபோது அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து வருவதாகவும் உங்கள் பெண்ணுடன் வாழ முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மகாலெட்சுமியின் தாய் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஒரு வாரமாகியும் போலீசார் எந்த விட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மகாலெட்சுமி செந்தில்குமார் வீட்டுக்கு இரவு வந்து நியாயம் கேட்டார். இதனால் மாமியாரும், மாமனாரும் வீ்ட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் திகைக்க மகாலெட்சுமி விடிய விடிய கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications