தவறான மருத்துவம்: குழந்தைப்பேறு சிகிச்சைக்காக சென்ற சென்னை பெண் பலி
சென்னை: குழந்தைபேறுக்காகச் சிகிச்சை பெற்ற இளம்பெண் டாக்டர்களின் தவறான மருத்துவத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மோகன் என்ற தனியார் கார் நிறுவன உதவி மேலாளரின் மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23). இவர் குழந்தை பேறுக்காக கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் சிகிச்சைக்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், அவர் தொடர்ந்து மயக்கநிலையிலேயே இருந்து, கண் திறக்காமலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாச்சியார் உயிரிழந்த தகவல் அறிந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்ட மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் திரண்டனர். நாச்சியாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
தவறான சிகிச்சையால்தான் நாச்சியார் இறந்ததாகவும், இதனால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
ராயப்பேட்டை மருத்துவ மனையில் டாக்டர்கள் குழு நாச்சியாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறது. அதன் முடிவு வெளி வந்த பிறகு தவறான சிகிச்சையால் தான் நாச்சியார் உயிரிழந்தார் என தெரிய வந்தால், டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications