மதுரை அருகே பயங்கரம்... இளம் பெண் தீவைத்து எரித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே 25 வயதான இளம் பெண் ஒருவர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். பாதி எரிந்த நிலையில் அப்பெண்ணின் உடலை, பரவை பகுதியில் வைத்து போலீஸார் மீட்டுள்ளனர். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவி்ல்லை.

அந்தப் பெண்ணின் உடல், இடுப்புக்குக் கீழ் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் முகத்தையும் முழுமையாக எரித்து விட்டனர். எனவே அந்தப் பெண் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் பெண்ணின் எரிந்த உடல் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்தனர் போலீஸார். பரவை, அண்ணா நகர் பகுதியில் உடல் கிடந்தது.

பெட்ரோல் ஊற்றி அப்பெண்ணை எரித்துள்ளனர் குற்றவாளிகள். கொலைக்கு முன்பாக அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் திடமாக நம்புகின்றனர்.

அப்பெண்ணின் காதில் தோடு உள்ளது. கையில் வளையல் உள்ளது. உடை எரிந்து போய் விட்டது. முழுமையான அடையாளம் கிடைக்கவி்ல்லை. 25 வயது இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

யாராவது அப்பகுதியில் காணாமல் போய் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+