சென்னை லாட்ஜில் பட்டதாரி இளம் பெண் படுகொலை.. தப்பியோடிய மர்ம நபர்கள் யார்?
மயிலாப்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பரையும் மற்றொருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை: சென்னை, மயிலாப்பூரில் லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ம் தேதி நள்ளிரவில் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையிலுள்ள லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

அப்போது, அந்த பெண், மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த எத்திராஜ் எனும் பழைய பேப்பர் கடை வைத்துள்ளவரின் மகள் என தெரியவந்தது. எத்திராஜுக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள்தான் நிவேதா (22). பி.பி.ஏ பட்டதாரி என்பது தெரியவந்தது.
திருமணமாகாத நிவேதா, வேலை தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி பகலில் நிவேதா வெளியில் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதன்பிறகு வீடு திரும்பவில்லை என்பதால் எத்திராஜ், நிவேதாவை காணவில்லை என்று மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நிவேதாவுடன் வாலிபர் ஒருவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் நிவேதாவின் காதலராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவரை காணவில்லை என்பதால் அவர் கொலை செய்து தப்பியோடிவிட்டார் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நிவேதாவின் கழுத்தில் காயம் இருப்பதால் இந்த சந்தேகம் வலுப்பெறுகிறது. லாட்ஜ் ரகசிய கேமராக்களை ஆய்வு செய்தபோது நிவேதா தங்கியிருந்த அறைக்குள் 2 வாலிபர்கள் சென்றது தெரியவந்தது. எனவே கொலையில் காதலனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பிருக்கலாம் என தெரிகிறது. தப்பியோடிய வாலிபர்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதால் போலீசார் அங்கும் விரைந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications