கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவன்.. கொன்று புதைத்த மனைவி.. சிதம்பரத்தில் ஷாக்!
சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் கணவரை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் வேளங்கிராயன்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் அனல் மின் நிலையத்திற்கு அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் சென்று பார்த்த போது கை மட்டும் வெளியே தெரியும்படி மேலோட்டமாக புதைக்கப்பட்டிருந்தது.

பரிசோதனை
இதையடுத்து போலீஸார் அந்த சடலத்தை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் இறந்தவர் சேத்தியாத்தோப்பு பெரியநற்குணம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (32) என்பது தெரியவந்தது.

கொலை
இவரது மனைவி பெயர் தீபா (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சத்யராஜ் பால் நிறுவனத்தில் டிரைவர் பணியில் இருந்து வருகிறார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சத்யராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

4 பேர் கைது
அவரது செல்போன்களை ஆய்வு செய்ததில் சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (29), சக்திவிளாகம் பகுதியைச் சேர்ந்த வினோத் (23). விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (18) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

5 போன்கள் பறிமுதல்
இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கார், இரு சக்கர வாகனம், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சத்யராஜின் மனைவி தீபாவுக்கும் ஐயப்பனுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சத்யராஜ் கண்டித்துள்ளார்.

பெண் கைது
இதையடுத்து இனி கள்ளத்தனமாக உல்லாசமாக இருக்க முடியாது என கருதிய இருவரும் சேர்ந்து சத்யராஜை கொலை செய்துவிட்டனர். பின்னர் தனது கூட்டாளிகளுடன் சடலத்தை புதைத்துள்ளனர். இதையடுத்து சத்யராஜின் மனைவி தீபாவையும் போலீஸார் கைது செய்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications