Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்போன் காதலனுடன் உல்லாசம்... அரிவாளுடன் விரட்டிய கணவன்: நிர்வாணமாக ஓடிய ஜோடி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் உல்லாசமாக இருந்தபோது அரிவாளுடன் கணவர் விரட்டியதால் இளம்பெண்ணும், கள்ளக்காதலனும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவன காவலாளி. முத்துச்சாமியின் மனைவிக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது என்ஜீனியருக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. மனைவி அடிக்கடி செல்போனில் வாலிபருடன் பேசுவதை முத்துச்சாமி கண்டித்தார். எனவே, இதுகுறித்து அந்த பெண் தனது செல்போன் காதலனிடம் கூறினார்.

Woman and her paramour run nude in the street

வெறும் நட்புதான்

இதையடுத்து அந்த வாலிபர் நேற்று முன்தினம் ஆத்தூரில் முத்துச்சாமி வேலைசெய்யும் நிறுவனத்துக்கு வந்து அவரை சந்தித்து பேசினார். அப்போது நான் உன் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றும், நட்பாக பழக மட்டும்தான் செய்தேன் என்றும் கூறினார்.

பழிவாங்க திட்டம்

இதையடுத்து முத்துச்சாமி, நாம் இனி நண்பர்களாக இருப்போம் என்று கூறி ஏத்தாப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அந்த வாலிபரை அழைத்து வந்தார். அங்கு முத்துச்சாமியும், அந்த வாலிபரும் மதுகுடித்தனர். முத்துச்சாமியின் மனைவி அவர்களுக்கு சமைத்து போட்டார். அப்போது அந்த வாலிபரையும், மனைவியையும் பழிவாங்க நினைத்த முத்துச்சாமி, ‘என் மனைவியுடன் உல்லாசமாக இருக்க விரும்பினால் இருந்து கொள்' என்று அந்த வாலிபரிடம் கூறினார்.

நிர்வாணமாக ஓட்டம்

நள்ளிரவில் அந்த வாலிபரும், முத்துச்சாமியின் மனைவியும் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துச்சாமி அந்த வாலிபரை சரமாரியமாக தாக்கி கொடுவாளை எடுத்துக்கொண்டு வெட்ட முயன்றார். உடனே அந்த வாலிபர் அவசர, அவசரமாக தான் உடுத்தியிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு தெருவில் நிர்வாணமாக ஓடினார். அவரை முத்துச்சாமி விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை.

மனைவி கொல்ல முயற்சி

பின்னர் முத்துச்சாமி வீட்டுக்கு வந்து மனைவியை தாக்கி கத்தரிக்கோலால் குத்த முயன்றார். இதனால் அந்த பெண் உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து நிர்வாணமாக ரோட்டில் ஓடினார். வாலிபரும், பெண்ணும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நைட்டி கொடுத்த மக்கள்

பின்னர் அங்குள்ள பொதுமக்கள் அந்த பெண்ணுக்கு ஒரு நைட்டியை கொடுத்து அணிய செய்தனர். வாலிபர் ஒரு மரத்துக்கு அடியில் சென்று துணிகளை உடுத்திக்கொண்டார். இதையடுத்து அந்த வாலிபரும், பெண்ணும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

கீழே விழுந்துட்டோம்

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணைக்கு சென்றபோது அவர்கள் வழக்கு எதுவும் வேண்டாம் என்றும், கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். இதனால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். பின்னர் அந்த வாலிபரும், பெண்ணும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கணவர் மீது வழக்குப் பதிவு

இதனிடையே முத்துச்சாமி ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் திரிந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் உதவிகலெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+