ரயிலில் வந்த 26 வயது பெண் துறவி பாதி வழியில் மாயம்.. என்ன நடந்தது?
சென்னை: திருச்சியிலிருந்து குஜராத் செல்வதற்காக சென்னைக்கு ரயிலில் வந்த இளம் பெண் துறவி வழியிலேயே மாயமாகி விட்டார். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவர் சார்ந்த ஆசிரமம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
திருச்சி தொட்டியம் அருகே உள்ளது ஸ்ரீலலிதா மகிளா சமாஜம். இங்கு பெண் துறவியாக இருந்து வருபவர் விமலாம்பா (26). ஆசிரமத்திலேயே வளர்ந்து துறவு பணியில் ஈடுபட்டு வந்தவர் இவர். இவர், குஜராத்தில் உள்ள புஜ் ஆசிரமத்துக்கு செல்வதற்காக குளித்தலையில் இருந்து மேலும் சில பெண் துறவிகளுடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார்.
இரவு 12 மணி வரை அனைவரும் ரயிலில் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் தூங்கியுள்ளனர். அதிகாலை 2 மணிக்கு மற்ற துறவிகள் எழுந்து பார்த்தபோது விமலாம்பாவை காணவில்லை. விழுப்புரம்- விருத்தாசலம் இடையேதான் விமலாம்பா காணாமல் போயிருக்கிறார். அவரது உடமைகள், செல்போன் எல்லாம் ரயிலில் இருந்தது. அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
இதுகுறித்து ஆசிரமத் துணைத் தலைவர் சாம்பவி வித்யாம்பா ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications