பிள்ளைங்க வளர்ந்துருச்சு, வேண்டாம்... கைவிடச் சொன்ன பெண் .. கழுத்தை நெரித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 15 வருடமாக இவர்கள் ரகசியக் காதலை மேற்கொண்டிருந்ததும், அதை விடக் கோரியதால் கோபத்தில் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை அடுத்துள்ளது எஸ்.புங்கம்பாளையம். இப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பெயர் தெய்வானை (38). இளம் வயதிலேயே திருமணமானவர். இத்தம்பதிக்கு 20 வயதில் அருள்குமார் என்ற மகனும், தனலட்சுமி (19) என்ற மகளும் உள்ளார்கள்.
சமீபத்தில் தெய்வானையின் இறந்த உடலை எஸ்.புங்கம்பாளையத்தில் உள்ள சொலவப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர். இதுகுறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

தங்கை கணவர்
இந்த விசாரணையில் தெய்வானையின் உடன் பிறந்த தங்கை ராதாவின் கணவரான முருகன் என்பவர் சிக்கினார். 42 வயதான இவர் தெய்வானை காணாமல் போனபோது அவரும் மாயமாகியிருந்தார். இதையடுத்து அவர் மீது சந்தேகமடைந்து போலீஸார் விசாரித்தபோதுதான் அவர் சிக்கினார்.

15 வருட கள்ளக்காதல்
தெய்வானைக்கும், முருகனுக்கும் இடையே கிட்டத்தட்ட 15 வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.யாருக்கும் சந்தேகம் வராமல் ராதா மற்றும் தெய்வானையுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் முருகன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தெய்வானையும், முருகனும் சந்தித்து உறவை வளர்த்துள்ளனர்.

உல்லாசத்தின்போது வாக்குவாதம்
இதுகுறித்து முருகன் கூறுகையில், சம்பவத்தன்று நாங்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது தெய்வானை எனது குழந்தை பெரியவர்களாகி விட்டார்கள். எனவே இனி நாம் தொடர்பை துண்டித்து கொள்ளலாம் என்றார். இது எனக்குப் பிடிக்கவில்ல. கோபம் வந்தது.

கழுத்தை நெரித்துக் கொன்றேன்
நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. விட்டு விடலாம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அரை மயக்கத்தில் இருந்த தெய்வானையை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் தலைமறைவாகி விட்டேன் என்று முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications