ஆரணியில் சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்களிடம் சிக்கி ஆசிரியை படுகாயம்
ஆரணி: திரவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடர்கள் பறித்தபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஆரணியைச் சேர்ந்தவர் சொர்ணலதா. இவர் ஆசிரியையாக இருக்கிறார். இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் அவர் போய்க் கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு கொள்ளையர்கள், சொர்ணலதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர். இதில் நிலை தடுமாறி சொர்ணலதா கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

கொள்ளையர்கள் இருவரும் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் சொர்ணலதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இப்படித்தான் ஜெயந்தி என்ற ஆசிரியை குடிகார திருடன் ஜெயந்தியின் கைப்பையைப் பறிக்க முயன்றபோது பரிதாபமாக விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார், இன்னொருவரும் அந்த சம்பவத்தில் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல வேலூர் அருகே ஒரு பெண் போலீஸ்காரரும் இதேபோல கொள்ளையர்களிடம் சிக்கி நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்து பின்னர் மரணமடைந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications