ஜாமீனில் விடுதலையாக துடிக்கும் ஆடி கார் ஐஸ்வர்யா... ஹைகோர்ட்டிலும் மனுத் தாக்கல்
சென்னை: மதுபோதையில் காரை ஓட்டி கூலித் தொழிலாளி முனுசாமியின் உயிரிழப்புக்குக் காரணமான 'ஆடி கார்' ஐஸ்வர்யா விடாது முயற்சியாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா வில்டன், கடந்த ஜூலை 1-ந் பழைய மகாபலிபுரம் சாலையில் கார் ஓட்டிச் சென்றபோது கூலித் தொழிலாளி முனுசாமி மீது மோதியது. இதில் முனுசாமி இறந்தார்.

ஐஸ்வர்யா மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தொடர்ந்து ஜாமீனில் விடுதலையாக முயற்சித்து வருகிறார்.
ஐஸ்வர்யா சார்பில் 2-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனையில் ஐஸ்வர்யா மது அருந்தியுள்ளது உறுதியாகி இருப்பதாகக் கூறி அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் ஐஸ்வர்யா. சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் அளிக்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications