ஜெயலலிதாவை பார்க்கும் ஆசையில் பிரச்சார கூட்டத்திற்கு வந்த பெண் சாவு

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏற்காடு தொகுயில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சார கூட்டத்திற்கு வந்த பெண் மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.

சேலம் மாவட்டம் தும்பல் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி, ஆத்துவளவு பகுதியைச் சேர்ந்தவர் சாலம்மாள்(59). அவரது கணவர் ராஜு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர்களின் பிள்ளைகள் ராமச்சந்திரன், சாரதா, வைரமணி, லதா. இதில் ராமச்சந்திரன் அதிமுக தொண்டர் ஆவார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஏற்காடு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் செய்ய வந்த ஜெயலலிதாவை பார்க்கும் ஆசையில் ராமச்சந்திரன் தனது தாயுடன் பேளூர் வந்தார். நேற்று காலை 10 மணி முதல் அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் காத்திருந்தனர்.

11 மணிக்கு சாலம்மாள் திடீர் என்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பிரச்சாரத்திற்காக அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களால் சாலம்மாளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அவர் வாழப்பாடி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+