நிர்மலா தேவியுடன் ஒன்றாக தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை.. சிபிசிஐடி சம்மன்
நிர்மலா தேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளனர்.
Recommended Video

விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவியுடன் மதுரை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரி பேராசிரியையிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசி, தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

5 நாள் சிபிசிஐடி விசாரணை முடிவடையவுள்ள நிலையில் இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுதொடர்பாக உதவிப் பேராசிரியர் முருகனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலாதேவியுடன் தொடர்புடைய அனைவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நிர்மலா தேவியுடன் தங்கி இருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரி பேராசிரியை ஜெசிந்தா தமிழ்மலரை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான, விசாரணைக்கு ஆஜராகுமாறு உதவிப் பேராசிரியை ஜெசிந்தா தமிழ் மலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் நிர்மலாதேவியின் தொடர்பு குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications