டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு.. பெண்கள் சாலை மறியலால் பரபரப்பு
டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி: தமிழகத்தில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். புதிய கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெண்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் கோட்டார் அருகே உள்ள பெரியவிளை பகுதியான ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு டாஸ்மாக்கடை திறக்க கூடாது என்று கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் செய்து வந்தனர். மேலும் கட்டுமான பணியும் முடியும் தருவாய்க்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு புதிதாக கட்டப்பட்டு வரும் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதியவர் ஒருவர் கையில் மண்ணெண்ணை கேனுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றார். இங்கு டாஸ்மாக் கடையை திறந்தால் தீக்குளிப்பேன் என அவர் மிரட்டல் விடுத்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications