பெருந்துறையில் 2 வாரமாக குடிக்க தண்ணீர் இல்லை… காலி குடங்களுடன் சாலை மறியலில் குதித்த பெண்கள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமுற்ற பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு: பெருந்துறை செங்கோடம்பள்ளம் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன.
கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.

காலிக் குடங்களுடன்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள செங்கோடம்பள்ளம் பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் ஈரோடு-பெருந்துறை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமுறல்
அப்போது பேசிய பெண்கள், குடிநீரை வீட்டிற்கு கொண்டு வர சாலைகளில் சுற்றித் திரிவதாக கூறினார்கள். இதனால் பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

அதிகாரிகள் நடவடிக்கை இல்லை
இரண்டு வாரங்களாக முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்றால் எப்படி அன்றாட வாழ்க்கையை தள்ள முடியும். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஈரோடு பெருந்துறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications