எப்போதும் போடும் டிவிட் எங்கே பிரதமர் மோடி? தூத்துக்குடி பற்றி ஏன் அமைதி? சரத்குமார் கேள்வி
எப்போதும் டிவிட் போடும் மோடி, ஏன் தூத்துக்குடி பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எப்போதும் டிவிட் போடும் பிரதமர் மோடி, ஏன் தூத்துக்குடி பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100 நாட்களுக்கும் மேலாக அவர்கள் போராடி வந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அவர்கள் நடத்திய அமைதி பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இதுவரை மத்திய அரசு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக பிரதமர் மோடி இப்படி ஒரு சம்பவம் நடந்தது கூட தெரியாதது போல இருக்கிறார். இது மக்கள் மத்தியில் பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து தற்போது சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் , மாண்புமிகு பிரதமர் அவர்களே, ரஷ்யாவும், அமெரிக்காவும் சீனாவும் ஏன் நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் கூட உங்களுக்கு நண்பர்களாக தெரியும் போது, தமிழகம் மட்டும் உங்களுக்கும் தேவையில்லையா??? நாங்களும் இந்த தேசத்தின் முக்கியமான மாநிலம்.
#BanSterliteSaveThoothukudi pic.twitter.com/sguCDLLrmq
— R Sarath Kumar (@realsarathkumar) May 24, 2018
இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக அதிகம் உழைத்த, உழைத்துக் கொண்டு இருக்கும் மாநிலம். 13 அப்பாவி மக்களை அநியாயமாக இழந்து தவிக்கும் தமிழகத்திற்கு ஆளுநர் வழியாக உங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வழக்கமான டிவிட் எங்கே??
கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் வைரலாக்கியவர்கள் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம், என்றுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications