கோர்ட்டில் சாட்சிக்காக வைக்கப்பட்ட 31 செல்போன்கள் திருட்டு... 2 நீதிமன்ற ஊழியர்கள் கைது!
திருப்பூர்: திருப்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கிட்டதட்ட 31 செல்போன்கள் மாயமான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்த 31 செல்போன்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமாகின. இதுதொடர்பாக நீதிமன்ற தலைமை எழுத்தர் ஆஷியா பேகம் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட போலீஸார் செல்போன்களைத் திருடியதாக நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் கீதா, சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அவர்களிடமிருந்து 21 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி சிங்கராஜ், தாராபுரம் நீதிமன்ற தலைமை எழுத்தர் ஆஷியா பேகத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications