இன்று உலக அல்ஜீமர்ஸ் தினம்: அல்ஜீமர்ஸ் நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அல்ஜீமர்ஸ் எனப்படும் மறதி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செப்டம்பர் 21ம் தேதி அல்ஜீமர்ஸ் தினமாக அணுசரிக்கப்படுகிறது.

அல்ஜீமர்ஸ் எனப்படும் மறதி நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி அல்ஜீமர்ஸ் தினமாக அணுசரிக்கப்படுகிறது. அல்ஜீமர்ஸ் தாக்கியவர்கள் மெது மெதுவாக ஞாபக சக்தியை இழந்துவிடுவார்கள். இதனால் அவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்திடம் இருந்து விலகிவிடுவார்கள்.

காலம் செல்ல செல்ல அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து மரணித்துவிடுவார்கள். அல்ஜீமர்ஸ் நோய் எதனால் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு எந்த காரணத்தையும் இன்னும் குறிப்பிட முடியவில்லை. அல்ஜீமர்ஸ் நோய் இருப்பவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும், அவர்களால் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது, அவர்களின் குணாதிசயங்கள் மாறும்.

World Alzheimer's Day: Recognizing the symptoms of Alzheimer's Disease

அல்ஜீமர்ஸ் தினமான இன்று அந்த நோயின் அறிகுறிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. அண்மையில் நடந்த பேச்சு, நிகழ்ச்சிகள் பற்றி நினைவு இருக்காது.

2. தன்னுடைய பொருட்களை மறதியாக எங்காவது வைத்து விடுவது, சம்பந்தமே இல்லாத இடங்களில் வைத்து விடுவது.

3. மன அழுத்தம், எரிச்சல், கோபம்.

4. சாதாரண வார்த்தைகளைக் கூட பேச மற்றும் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது.

5. ஒரு வாக்கியம் அல்லது கேள்வியை திரும்பத் திரும்ப கூறுவது அல்லது கேட்பது.

6. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது.

7. அடுத்தடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய முடியாமல் இருப்பது. உதாரணமாக கிரைண்டரில் அரிசியை போட்டு ஆன் செய்து அது மாவு ஆன பிறகு சுவிட்சை ஆப் செய்வது ஆகியவற்றை அவர்களால் செய்ய முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+