உலக சுற்றுச்சூழல் தினத்துக்காக பிரம்மாண்ட பேரணி - வீடியோ
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாகவும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் திருச்சியில் 600 பேர் பேரணியாகச் சென்றனர்.
திருச்சி: உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் -5ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 600க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புனர்வை ஏற்படுத்தும் விதமாக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1974ஆம் ஆண்டு முதல், உலகின் 143 நாடுகளில் சுற்றுச்சூழல் தினத்தை ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி கொண்டாடி வருகிறது. இன்று தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுச்சூழல் தினத்துக்காக பேரணிகளும் கருத்தரங்கங்களும் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள், சுகாதரத்துறை ஊழியர்கள் கலந்துகொண்ட பேரணி நடந்தது. இதில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.












Click it and Unblock the Notifications