செல்போனைத் தூக்கிப் போடுங்க... கேமராவைத் தூக்கிப் பிடிங்க- இன்று உலக புகைப்பட தினம்
சென்னை: இன்று உலக புகைப்பட தினம்... கருப்பு, வெள்ளை காலம் தாண்டி செல்பிக்களில் வந்து நிற்கும் புகைப்படங்கள் நம்முடைய இவ்வுலக வாழ்வின் ஞாபகங்களை எப்போதும் தேக்கி வைத்துக் காட்டும் கண்ணாடிகள்.

அத்தகைய புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.

அதிலும், இன்று 176 வது ஆண்டு புகைப்பட தினமாகும். புகைப்பட கருவியை உருவாக்கு வதற்கான முயற்சி 13 வது நூற்றாண்டிலேயே தீவிரமடைந்து விட்டது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
குட்டி குட்டியாய் கேமராக்கள்:
அதைத் தொடர்ந்து, சிறியதும், பெரியதுமாக பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய முன்னேற்றம் 1825 ஆம் ஆண்டு ஏற்பட்டது. பிரான்ஸை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த புகைப்படம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது.
கண்ணாடி நெகடிவ் புகைப்படங்கள்:
1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித் தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.
ஒளியின் எழுத்து புகைப்படம்:
இது கிரேக்க மொழியி லிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
பேப்பர் பிலிம் புகைப்படங்கள்:
1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து 1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத் துறையையே புரட்டிப்போட்டது.
எல்லாம் டிஜிட்டல் கேமராக்கள் மயம்:
முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நினைவுகளையும் தன்னுள் அடக்கி அழகிய பரிசாய் நமக்கு அளிக்கும் புகைப்படக் கலை மேல்மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்!
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications