எழுத்தாளர் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் - படைப்பாளிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக தஞ்சையின் அனைத்து இலக்கிய அமைப்புகளின்,எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் கூட்டு ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பசு கவுதமன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அமர்சிங், மதிமுக தலைமைக்கழக பேச்சாளர் வி.விடுதலை வேந்தன், தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அமைப்பாளர் தஞ்சை சாம்பான், தமிழ் கலை இலக்கியப் பேரவையின் வைகறை, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன், பொறியாளர் கென்னடி, தஞ்சைக் கவிஞர் சுகன், வெற்றித் தமிழர் பேரவையின் ராகவ் மகேஷ், தஞ்சை இலக்கிய வட்டத்தின் செ.சண்முகசுந்தரம், தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தியாக சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ.கலந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ்.பழனிராஜன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

நிறைவாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா.காமராசு நிறைவுறையாற்றினார். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள்,எழுத்தாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகவும்,அவருக்கு எதிராக செயல்பட்டு வரும் மதவாத,சாதிய சக்திகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications