கள்ளக்குறிச்சியில் கால் வெச்ச நேரமே சரியில்லையே.. வீட்டிற்குள் நுழைந்ததுமே அதிர்ந்து போன மணமகள்? ஏன்?
கள்ளக்குறிச்சி: நம் நாட்டில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வது, அல்லது மனைவியை கணவன் கொலை செய்வது, அல்லது இருவரில் யாராவது ஒருவர் கள்ளக்காதலுக்காக தாங்கள் பெற்ற குழந்தைகளையே கொல்வது என சொல்லமுடியாத அளவுக்கு கொடுமைகள் தலைதூக்கி உள்ளன. அடிப்பதும், உதைத்து டார்ச்சர் செய்வது மட்டுமே மரணம் வரை செல்வதில்லை.. சிலசமயம் பிற்போக்குத்தனமும் மரணத்தை கொண்டுவந்துவிடுகிறது. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
இன்று எத்தனையோ குடும்பங்களில் பெற்றோர்கள் கண்ணீரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்... பெற்ற பிள்ளைகளுடன் பல தாய்-தகப்பன்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே இருப்பதில்லை.. ஒரே வீட்டிற்குள் இருந்தாலும், முகத்தை பார்த்து பேசும் போக்கு இருப்பதில்லை.. ஆளுக்கொரு திசையில் பயணம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள், தோழன் - தோழி, இப்படி எந்த உறவிலும் புரிதல் இருப்பதில்லை.. போதாக்குறைக்கு பிற்போக்குத்தனமும் சிலரிடம் சேர்ந்து கொள்கிறது.
மூடநம்பிக்கை - பெண்கள் பாதிப்பு
குறிப்பாக பெண்கள் மீதான பிற்போக்குத்தனம் என்பது, பல குடும்பங்களில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் அதிகரித்து காணப்படுகிறது. இது பெண்களின் வாழ்வையே பல்வேறு வகைகளில் பாதிப்பை தந்துவிடுகிறது.
குறிப்பாக, குடும்ப சமூகத்தில் மகனுக்கு மேலாதிக்கம், இவ்வளவு படிப்பு தேவையா? வேலைக்கு போகணுமா? போன்றவைகளில் பெண்ணின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.. வீட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தல், சம்பளத்தில் உரிமையின்மை, நண்பர்கள், வெளியே செல்வதற்கு கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்கள் இன்னும் மறைமுகமாக பல குடும்பங்களில் இருக்கவே செய்கிறது. இதனால் மன அழுத்தத்துக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளாகும் பெண்கள் தற்கொலை வரை செல்லும் துயரமும் நடக்கவே செய்கின்றன.
பிற்போக்குத்தனம்
வடமாநிலங்களில் இதுபோன்ற இன்னல்கள் அதிகம் என்றாலும் தமிழகத்திலும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது.. இதோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பரிதாப சம்பவம் நேற்று நடந்துள்ளது.. திருமணமான 3 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ளது மணியார்பாளையம் கீழாத்துக்குளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கலியன் .. இவரது 19 வயது செல்ல மகள் மோனேஸ்வரிக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் நவீன்குமார் என்பவரைதான் மோனேஸ்வரி மணமுடித்துள்ளார்.
வந்த நேரம் சரியில்லை
இந்நிலையில், திருமணமாகி 1 மாதத்தில் நவீன்குமாரின் அம்மா அதாவது மோனேஸ்வரியின் மாமியார், ராஜாம்பாள் உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டார். உடனே நவீன்குமாரின் குடும்பத்தினர் அத்தனை பேரும், மோனேஸ்வரி வீட்டிற்குள் கால் வைத்த நேரம் சரியில்லை என்று சொல்லி மோசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேச்சினால் மோனேஸ்வரி மனம் நொந்து போனார்.. இதுகுறித்து தன்னுடைய பெற்றோரிடம் சொல்லவும், மகள் மோனேஸ்வரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
அப்போதுகூட மாமியார் வீட்டினர் பேசிய இழிவான பேச்சுக்களின் அதிர்ச்சியிலிருந்து மோனேஸ்வரி மீளவில்லை.. இதனால் ஈச்சங்காட்டில் உள்ள காட்டுக்கொட்டாயில் விஷம் குடித்து மயங்கி விழுந்து விட்டார்..
சொல்லி சொல்லியே தற்கொலை
இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், சிகிச்சை பலனின்றி மோனேஸ்வரி பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது..
வீட்டிற்குள் மருமகள் கால் வைத்த நேரம் சரியில்லை என்று சொல்லி சொல்லியே, இளம்பெண்ணை தற்கொலை வரை கொண்டு சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications