"சுப்பலி நாட் பார் சலே".. உங்க மொழிபெயர்ப்பில் தீயை வைத்து கொளுத்த.. !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் இனி மெல்லச் சாகும் என்று தெரியாமல் சொல்லவில்லை கவிஞர். தமிழர்கள் எப்படியெல்லாம் எதிர்காலத்தில் இருக்கப் போகிறார்கள் என்பதை நன்றாக ஊகித்தும், உணர்ந்தும்தான் அப்படிச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

மத்திய அரசு அனுப்பிய மருந்து பாட்டிலில் தமிழில் மொழி பெயர்ப்பதாக கூறி படு கேவலமாக மொழி பெயர்த்து அசிங்கப்படுத்தியுள்ளனர் தமிழை.

Wrong translation by the Govt irks Tamils

Tamilnadu government supply not for sale என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்ப்பதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாடு கோவத் சுப்பலி நாட் பார் சலே என்று போட்டு தங்களது மொழி பெயர்ப்பு அறிவை வெளிப்படுத்தி புல்லரிக்க வைத்துள்ளனர்.

தமிழே தெரியாதவர்களிடம் தமிழ் சிக்கினால் என்னாகும் என்பதற்கு இது சாதாரண உதாரணம். இன்னும் என்னென்ன அக்கிரமத்தையெல்லாம் தமிழும், தமிழர்களும் சந்திக்கப் போகிறார்களோ!

உங்களது வாயில் தர்ப்பையைப் போட்டுக் கொளுத்த வேண்டும் என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A very pathetic translation by the health department has irked people of Tamil Nadu.
Please Wait while comments are loading...