ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்று முதல் "ஒய்" பிரிவு பாதுகாப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்று ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்று ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை மின் விளக்கு சின்னத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் போட்டியிட்டனர். அப்போது போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு மிரட்டல்கள் வந்ததாக புகார் அளித்தார்.

Y Security for OPS

இதனிடையே, ஓ.பன்னீர் செல்வத்தின் காரும் தேனி அருகே தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நகலை தமிழக காவல் துறை டிஜிபி ராஜேந்திரனுக்கும் அனுப்பியது.

இந்நிலையில் அவருக்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதில் துப்பாக்கி ஏந்திய 11 துணை ராணுவ படையினர் அவருடன் பாதுகாப்பு பணியில் எந்நேரமும் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+