ஏலம்போகும் ”ஏழைகளின் ஊட்டி”யின் மானம்- "2ம் தர" தொழில்களால் குறையும் மவுசு!
ஏலகிரி: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரியும் வரவர மறைமுகத்தொழில்களுக்கு பெயர் போன சுற்றுலாத்தலமாக மாறிவருகின்றது.
வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்ல வடதமிழகத்தின் பிரபலமான சுற்றுலா தலம் ஏலகிரி.
இங்கு சில நாட்களாக ஏழை மக்களை விட கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்களும், ஐ.டி கம்பெனியினரும், கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர்.

பிச்சுக்கும் அறை வாடகை:
ஊட்டியை விட இந்த ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் ஹோட்டல்,விடுதிகளில் அறை வாடகை அதிகமோ அதிகம்.

இரண்டாம் தர தொழில்கள்:
இரவு பார்ட்டிகள், கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் என்று எல்லா இரண்டாம் தர தொழில்களும் இங்கு மறைமுகமாக நடந்து வருகிறது.

இரவுப் பறவைகள்:
இந்த நிலையில் பாலியல் தொழிலுக்காக சிலர் இரவு நேரத்தில் ஆட்களை பிடிக்கின்றனர் என திருப்பத்தூர் டி.எஸ்.பி சுப்பிரமணியனுக்கு தகவல் வந்தடைந்தது.

அதிரடி சோதனை:
அதன்படி 20 ஆம் தேதி இரவு ஏலகிரி ஹோட்டல் மற்றும் சாலைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

ஏழு பேர் கைது:
இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக புரோக்கர் ரபீக் அஹமது, அவரது உதவியாளர் ஜெயவேலு, ஒரு ஹோட்டல் மேலாளர் ஷாஜஹான்,கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுதாகர், சவுகத், முருகன், ஆட்களை மலைக்கு கொண்டு வரும் தர்மபுரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த கார் டிரைவர் கந்தசாமி ஆகிய 7 பேரையும்,பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 3 பெண்களையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மலையிலும் சோதனை தேவை:
மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் 3 பெண்களை திருப்பத்தூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர். இதேபோல் மலையில் உள்ள பல விடுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என மலையில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications