ஏற்காடு இடைத்தேர்தல்: 'அம்மா' சாதனைகளைக் கூறி வாக்கு கேளுங்கள்- அமைச்சர் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

Yercaud bypoll: Minister Palanisamy's advice to ADMK men
சேலம்: தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஏற்காடு தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேர்தல் பற்றி ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட நெய்யமலை, தும்பல், கருமந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்மாதிரி ஆகும். இதில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு கேட்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ரஞ்சித்குமார், முருகேசன், யூனியன் சேர்மன்கள் சித்ராகுமார், சின்னதம்பி, ஒன்றிய பேரவை வாசுதேவன், பாண்டியன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+