அனுமதியின்றி ஆளில்லா விமானம் பறக்கவிட்ட ஒய்ஜி மகேந்திரன் மகன் கைது
சென்னை: சென்னையில் அனுமதியின்றி ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டதாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் ஆளில்லாத விமானம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் பறக்க விடுகிறவர் காவல்துறை, விமானத்துறை உள்ளிட்ட துறைகளில் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையின் முகத்துவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ஒரு நபர், ஆளில்லாத விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்கவிட்டார்.
தகவலறிந்தகும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, அங்கு ஆளில்லாத விமானத்தைப் பறக்கவிட்டவரிடம் விசாரித்தனர். இதில் அவர், அந்த விமானத்தை பறக்கவிடுவதற்கு அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கைது செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.ஆளில்லா விமானமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷா (30) என்பது தெரியவந்தது. விளம்பரப் படப்பிடிப்புக்காக அதை வாங்கியதாக போலீஸில் ஹர்ஷா தெரிவித்தார். ஹர்ஷாவின் முழுப்பெயர் ஹர்ஷவர்த்தனா என்பதாகும். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் பட்டினப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications