சென்னை: 3ம் வகுப்பு மாணவி பலாத்காரம் - யோகா ஆசிரியர் கைது
சென்னை: சென்னையில் யோகா பயிற்சிக்கு சென்ற மூன்றாம் வகுப்பு மாணவியை தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. சிறுமியை சீரழித்த ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோடம்பாக்கம் டெய்லர்ஸ் அவென்யூ கார்டன் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் மரியா ஞானராஜ்,(வயது 45). இவர் அரும்பாக்கம் அன்னை சத்யா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கம்யூட்டர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் மாலையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து வந்தார்.

அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஜேம்ஸ் ஞானராஜிடம் யோகா பயிற்சி பெற்று வருகிறார். அந்த சிறுமிக்கு ஜேம்ஸ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி அந்த சிறுமி யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜேம்ஸ் திங்கட்கிழமையன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயாரிடம் கூறினார். உடனே சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர் அழைத்து சென்றார். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து பெற்றோர் விசாரிக்கவே, நடந்த விசயத்தை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் தந்தை, அண்ணாநகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜேம்ஸ் ஞானராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications