தாலி அகற்றும் போராட்டத்தில் பங்கேற்க செல்போன் மூலம் முன்பதிவு: தி.க. அறிவிப்பு
சென்னை: தாலி அகற்றும் போராட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செல்போன் மூலமாகவும் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்யலாம் என திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தாலி அகற்றும் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த போராட்டத்திற்கு இந்து அமைப்புகள், பாஜக ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிராக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட 10 இந்து அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.
மேலும் தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிராக அயனாவரம், வேப்பேரி, தலைமைச் செயலக காலனி காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் குறித்து திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந் தேதி அன்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் பெண்களின் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சி விழாவில் பங்கேற்று தாலியை அகற்றிக் கொள்ள விரும்புவோர் செல்போனில் முன்பதிவு செய்தல் அவசியமாகும். முன்பதிவு செய்ய விரும்புவோர் 99403 48533, 98412 63955 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொள்ள செல்போன் மூலம் இதுவரை 7 பெண்கள் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications