சபாஷ் வாசகர்களே... "ஒன் இந்தியா" வாசகர்கள் உதவியால் கம்பீரமாக வளர்ந்து வரும் அரசு பள்ளி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரு ஆசிரியை எடுத்த அசாத்தியமான முயற்சிக்கு நாங்களும் வருகிறோம்.. என்று கை கொடுத்த ஒன்இந்தியா தமிழ் வாசகர்களின் உதவியால் இன்று ஒரு அரசுப் பள்ளிக்கு அருமையான கட்டடம் எழும்பி முடியும் தருவாயை எட்டியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுஷ்பகிரி என்னும் கிராமம். வானம் பார்த்த பூமி. இக்கிராமத்தில் உள்ள பள்ளியானது (ஆஸ்பெஸ்டாஸ்) கல்நார் ஓட்டினால் ஆன கட்டடம். அந்த பள்ளி 1952ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும். வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் உஷ்ணம் தகிக்கும். இருப்பினும் இவைகளையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாக படித்து வருகின்றனர்.

ஆசிரியை மீனா ராஜன்
இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மீனா ராஜன் பள்ளிக்காக புதியக் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். அவரின் முயற்சியைக் கண்ட அக்கிராமப் பெரியவர் கோவிந்தசாமி ஆசிரியர் (ஓய்வு) தன்னிடம் இருந்த 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்தார்.

ரோட்டரி கிளப் உதவி
இதனைத் தொடர்ந்து ஆசிரியை மீனாராஜன் சென்னை ரோட்டரி மைலாப்பூர் அப்டவுன் உதவியுடன் 2,425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுத்தார்.

ஏழைகளுக்கான பள்ளி
ஏழைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி பணக்காரர்களும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் இந்த ஆசிரியை எடுத்த முயற்சியின் விளைவே இந்தப் புதிய கட்டடம்.

ஏழு கிராம மக்களுக்குப் பயன்
இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்தப் பள்ளிக்கூடம் பெரும் வரப்பிரசாதமாகும். இந்தப் பள்ளியின் கட்டுமானத்திற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கை கொடுத்த நம் வாச்கர்கள்
இதுகுறித்து நாம் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைப் படித்ததும் பல வாசகர்கள் அலைகடலென திரண்டு வந்து உதவிகளை அளித்தனர். இந்த உதவியால் இன்று பள்ளிக் கட்டடம் கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ளது.

90 சதவீத பணிகள் நிறைவு
கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்து விட்டது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும், நடுத்தட்டு குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளாதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுப்பதாகவும் கூறியுள்ளார் ஆசிரியை மீனா ராஜன்.

நன்றி வாசகர்களே
புதிய கட்டடம் குறித்து ஆசிரியை மீனா கூறுகையில், ஒன்இந்தியா- தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டு அதன் வாசகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான் நன்கொடைகளை அள்ளி வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எங்களது நன்றிகள். இன்னும் 10 சதவிகிதப் பணிகள் பாக்கி உள்ளது. அதை முடிக்கவும் வாசகர்கள் உதவினால் நன்றியோடு இருப்போம் என்று கூறியுள்ளார்.

உதவலாமே
இப்பள்ளிக்கு மேலும் உதவ முன்வருவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு உங்களது உதவிகளை அனுப்பி வைக்கலாம்.
SSA Aided primary school, Thuluvapushpagiri,
State Bank of India,
A/C. No: 32417332164
Santhavasal Branch
IFSC NO: SBIN0004879
CIF NO : 86375817197
மேலும் விவரங்களுக்கு: ஆசிரியை மீனாராஜன் - 09600142437, இமெயில் முகவரி - [email protected]
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications