அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த 80 வயது மூதாட்டியைக் குத்திக் கொன்ற 22 வயது ஆசிரியை
திருச்சி: திருச்சியில், அடிக்கடி தான் செல்போனில் பேசி வந்ததைக் கண்டித்த 80 வயதான மூதாட்டியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் 22 வயதேயான இளம் ஆசிரியை ஒருவர். திருச்சியை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
திருச்சி கோட்டை பட்டவர்த்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் நளாயினி. இவருடைய தாய் முத்து ரத்தினாவதி (80). இவருடைய கணவர் தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்த பின்னர் முத்துரத்தினாவதி மகள் நளாயினியுடன் வசித்து வந்தார். இவர்களுடைய வீட்டின் மாடி பகுதியில் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை நளாயினி அவருடைய மகன் கார்த்திக், மருமகள் ஜனனி ஆகியோர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டனர். வீட்டில் முத்துரத்தினாவதி மட்டும் தனியாக இருந்தார். உறவினர் திருமணத்துக்கு சென்ற நளாயினி வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
இதையடுத்து மாடியில் குடியிருப்பவர்களின் உதவியோடு கதவை திறந்து நளாயினி வீட்டினுள் சென்று பார்த்தபோது உடலில் பல பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துரத்தினாவதி பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நளாயினி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், துணை கமிஷனர் சரோஜ் குமார் தாகூர், உதவி கமிஷனர்கள் ரமேஷ்பாபு, செல்ல முத்து, ராமமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.
அது வீட்டினுள் மோப்பம் பிடித்து பின்னர் வீட்டின் மாடியில் குடியிருக்கும் ராஜேந்திரன் என்பவர் வீட்டுக்குள் சென்று விட்டு மீண்டும் கீழ் பகுதிக்கு திரும்பியது. இதில் ராஜேந்திரன் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்ததால் அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகள், மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரஜேந்திரன் மகளான உடற்கல்வி ஆசிரியை திவ்ய பிரியா (22), முத்துரத்தினாவதியை கொலை செய்தது தெரியவந்தது. திவ்யபிரியா அடிக்கடி செல்போனிலேயே பேசிக் கொண்டிருப்பாராம். இதை முத்துரத்தினாவதி கண்டித்துள்ளார். வயதுப் பெண் எப்போது பார்த்தாலும் போனிலேயே பேசிக் கொண்டிருப்பதா என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்துள்ளார் திவ்ய பிரியா.
இதனால் முத்துரத்தினாவதி தனிமையில் இருப்பதைப் பார்த்து அவரைக் கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியதால் பயந்து போன அவர் வீட்டில் சமயலறையில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததும், மேலும் நகையை கொள்ளையடிப்பதற்காக நடந்த கொலை போல காண்பிக்க நகையை பறித்து சாக்கடையில் வீசி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து திவ்யபிரியாவை போலீசார் கைது செய்தனர். செல்போனில் பேசியதற்காக கண்டித்த மூதாட்டியை இப்படிக் கொடூரமாக கொன்ற இளம் பெண்ணின் செயல் அதிர வைத்துள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications