திருமணம் செய்வதாக கூறி போலீஸ்காரர் சீரழித்துவிட்டார்: ராமநாதபுரம் சிறை முன்பு இளம்பெண் தர்ணா
ராமநாதபுரம்: சிறைக் காவலர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் ராமநாதபுரம் சிறை முன்பு திடீர் என தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி நத்தம்ரோடு வடிவேல்ஆசாரி கம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியம். அவரது மகள் யூஜிலின்மேரி. அவர் திடீர் என கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா, கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்தையா மகன் அருண்குமாரும், நானும் காதலித்தோம். அவர் திண்டுக்கலில் சிறைக்காவலராக இருந்தபோது நாங்கள் காதலித்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.
இதையடுத்து அவர் மீது திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் அவர் மீது இன்னும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரது உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியும் பலனில்லை. இந்நிலையில் அவர் ராமநாதபுரம் சிறைக்கு மாற்றலாகி வந்துவிட்டார். அதனால் தான் நியாயம் கேட்டு தர்ணா இருக்கிறேன் என்றார்.
இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சம்பவ இடத்திற்கு வந்து மேரியிடம் விசாரித்து அருண்குமார் மீது அவரது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அருண்குமார் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இதையடுத்து மேரி தனது தந்தையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications