சவுதி அரேபியாவில் சிக்கிய கணவரை மீட்க போராடும் நெல்லை இளம்பெண்: கலெக்டரிடம் மனு
சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை: சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்க மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது கணவர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நியூ காலனியை சேர்ந்தவர் கெங்கா ராஜன். இவரது மனைவி முத்துசெல்வி. கெங்காராஜன் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் முத்துச்செல்வி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஆலங்குளத்தில் வசித்து வருகிறேன். பிளஸ்டூ வரை படித்துள்ளேன்.
எனது கணவர் கடந்த ஆண்டு காவல்கிணறை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் மூலம் சவுதிக்கு சென்றார். அங்கு அவர் டிரைவராக பணி புரிந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக நான் எனது கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது செல்போனை எடுக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் ரூ.8 லட்சம் கொடுத்தால் உனது கணவரை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்று கூறுகிறார். கடந்த ஒரு வாரமாக செல்போனை எடுக்கவில்லை. எனது கணவர் எதோ சிக்கலில் மாட்டியுள்ளதாக உணர்கிறேன்.
இதனால் மாவட்ட நிர்வாகம் எனது கணவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு வயதில் பெண் குழந்தை இருப்பதால் குடும்பம் நடத்த முடியாமல் திணறி வருகிறேன். எனது கணவரை மீட்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications