சிகிச்சைக்கு பணமில்லை... தன்னை கருணைக்கொலை செய்திடுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுவன்
வேலூர்: சிகிச்சைக்குப் போதிய பணமில்லை எனக் கூறி தன்னை கருணை கொலை செய்யுமாறு 17 வயது சிறுவன் ஒருவன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வேலூர் அருகே புகாட்பாடியைச் சேர்ந்த சக்திவேல் (17) என்ற சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறான். இந்நிலையில் இன்று தனது தாயாருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சக்திவேல், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவிடம் மனு ஒன்றை அளித்தான்.
அதில், புற்று நோயால் கடந்த ஓர் ஆண்டாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சக்திவேல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியில்லை என்றும், தமது நிலையைக் கண்டு குடும்பத்தினர் மிகவும் வருந்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளான்.
மேலும், தம்மை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு ஆட்சியரிடம் சக்திவேல் வேண்டுகோள் விடுத்தான்.
சக்திவேலிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, ‘உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications