மர்மநபர்களால் இளைஞர் வெட்டி கொலை- அம்பை அருகே பதட்டம்: போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பிற்காக அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பிரம்மதேசம் மாதஙகோவிலை சேர்ந்தவர் ராஜா. கார் டிரைவராக பணியாற்றி வந்த இவரின் மனைவி பெயர் ஆதிலெட்சுமி. இவர்களுக்கு அனுசுயா என்ற ஒரு வயது மகள் உள்ளார். இவர் அம்பை அகஸ்தியர் கோயிலில் வாடகை கார் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அகஸ்தியர் கோயில் பக்கமுள்ள ஓட்டல் முன்பு புரோட்ட போடும் அடுப்பு அருகே தலை மற்றும் பின்கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த அம்பை டிஎஸ்பி சிவநேசன், இன்ஸ்பெக்டர்கள் பொன்னுசாமி, ஜெர்மின்லதா, சிவமுருகன், மாடசாமி, தாசில்தார் பால்துரை மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டு சினிமா தியேட்டர் வழியாக ரயில் நிலையம் சென்று நின்று விட்டது. ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில் மாலை பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த இருவர் ராஜாவை நைசாக பேசி ஓதுக்குபுறமாக அழைத்து சென்று வாயை பொத்தி வெட்டி கொன்றது தெரிய வந்தது. மேலும் உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ராஜா கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
இது தொடர்பாக பாளை அருகே உள்ள மருதூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்பிற்காக அங்கு அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications