விடிகாலையில் வினோத சத்தம்.. ஓட்டை பிரித்து பகீர்.. தாவி கவ்விய மோப்ப நாய்.. கள்ளக்குறிச்சி பரபரப்பு

சொந்த வீட்டில் திருடிய மகனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: சொந்த வீட்டிலேயே பணத்தை திருடிய நபரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சாவித்திரி - செல்வராஜ் தம்பதியினர்.. இவர்கள் வீட்டில் கடந்த 25ம் தேதி விடிகாலை, ஏதோ வினோத சத்தம் கேட்டுள்ளது.

Youth arrested for theft in his own house near Kallakurichi

அதனால், சாவித்திரி அலறி எழுந்து பார்த்தபோது, மர்மநபர் யாரோ வீட்டின் மேல் கூரையின் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் வந்து சென்றுள்ளது தெரிந்தது.. இதனைத்தொடர்ந்து வீட்டிலுள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.

சாவித்திரி எழுந்து வருவதற்குள், அந்த மர்ம நபர் பணத்தையும் எடுத்துக் கொண்டு, ஓட்டை பிரித்து அதன் வழியே தப்பிவிட்டதும் தெரியவந்தது.. இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சாவித்திரி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்..

கச்சிராயப்பாளையம் போலீசாரும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்... அப்படித்தான், சாவித்திரி வீட்டில் மோப்ப நாயுடன் போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது, அந்த நாய், சாவித்திரியின் இரண்டாவது மகனான ஆனந்தராஜ் என்பவரை தாவி பிடித்து கவ்வியது..

இதனால் போலீசார் அதிர்ந்து போய், ஆனந்தராஜிடம் விசாரித்தபோது, சொந்த வீட்டிலேயே இருந்த சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.. இதைக் கேட்டு சாவித்திரி அதிர்ந்து போனார்.. இறுதியில் பணத்தை திருடிய ஆனந்தராஜை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+