திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- காமுகன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற, 17 வயது காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அய்யலூர் கொம்பேறிபட்டியை சேர்ந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. பாட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை அவரது பாட்டி ரேசன்கடைக்கு அழைத்து சென்றார்.
போகும் வழியில் அதே ஊரை வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் வரவே, குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுமாறு சிறுமியின் பாட்டி அவனுடைய இருசக்கர வாகனத்தில் அனுப்பிவைத்துள்ளார்.

கொடூரனுக்கு இரையான சிறுமி
ராம்குமாரின் குரூர புத்தி வேலை செய்ய தொடங்கியது. குழந்தையை அங்கன்வாடிமையத்தில் விடாமல் கிணத்துபட்டி அருகே உள்ள மலைபகுதிக்கு அழைத்துசென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு சிறுமி அணிந்திருந்த தோடு கொலுசு போன்றவற்றை எடுத்துகொண்டு சென்றுள்ளான்

குழந்தையை தேடிய போலீசார்
அதோடு விடாமல் அந்த கொடூரன்,குழந்தையின் மீது கற்களை அடுக்கி வைத்து விட்டு சென்று விட்டார்.
குழந்தையை காணாமல் பெற்றோரும், உறவினர்களும் தேட துவங்கினர். பின்னர் அய்யலூரில் சுற்றி கொண்டிருந்த ராம்குமாரை பிடித்து விசாரித்தபோது, குழந்தையை விற்று விட்டேன் என கூறினான். பதற்றமடைந்த பெற்றோர் அவனை அடித்தனர்.

சிறுமியின் சடலம்
அவன் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் வடமதுரை காவல் துரையினரிடம் ஒப்படைத்தனர் காவல்துரையினர் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்ட ராஜ்குமார் போலீசாரை அழைத்துசென்று சிறுமியின் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டியுள்ளான்.

பெற்றோர் மறியல்
இதன்பிறகே சிறுமியின் உடலை கைப்பற்றி வடமதுரை காவல்துறையினர் விசாரனை நடத்திவருகின்றனர் சிறுமியின் உறவினர்கள் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடசெய்தனர்.

கொடூர குற்றவாளி
இந்த கொலைகாரன்மீது வடமதுரை காவல் நிலையத்தில் மூன்று திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் இவன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்புதான் சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்துள்ளான் என்பதையும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் பல கொலைகளை செய்வதற்கு முன்பே இவனை கடுமையாக தண்டித்து குண்டர்சட்டத்தில் அடைக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications