ஒரு தலைக்காதல்... நாகர்கோவிலில் ஆசிரியையை வெட்டி தனது கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பள்ளி ஆசிரியையை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிவிட்டு தானும் கழுத்தை அறுத்து கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடத்தை அடுத்த ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரி என்ற மலர். அவர் தேரூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல அவர் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது திடீரென அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் மலரை ஓட ஓட சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த நிலையில் ஆசிரியை மலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த வாலிபர் மலரை வெட்டிய அதே அரிவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சுடலைகண்ணு என்பதும், அவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications