விழுப்புரம் இளைஞர் டெங்குவிற்கு பலி.. தொடரும் உயிரிழப்பால் மக்கள் பீதி

விழுப்புரம் இளைஞர் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளார். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் டெங்கு காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா ராபர்ட். 32 வயதான இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Youth dies of dengue in Villupuram

அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று சின்னப்பா உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் அதிகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+