முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல், சோடா பாட்டில் வீசி கொலை முயற்சி.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
பொதுக்கூட்ட மேடையில், வாலிபர் கல்லை எடுத்து மேடையை நோக்கி வீசினார். பொன்முடியை நோக்கி வீசிய அந்த கல் பொன்முடிக்கு அருகில் நின்று கொண்டிருந்த கட்சி நிர்வாகி பூபதி என்பவரின் முகத்தில் பட்டது.
சென்னை: திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கற்கள் மற்றும் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை தமிழகம் முழுக்க அதன் தொண்டர்கள் 'இளைஞர் எழுச்சிநாள்' என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

துரைமுருகன் பங்கேற்பு
தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை முருகன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ ராதாமணி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

நின்றபடி உரை
நிர்வாகிகள் ஒவ்வொருவராக நின்று கொண்டு பேசினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு வாலிபர் கல்லை எடுத்து மேடையை நோக்கி வீசினார். பொன்முடியை நோக்கி வீசிய அந்த கல் பொன்முடிக்கு அருகில் நின்று கொண்டிருந்த கட்சி நிர்வாகி பூபதி என்பவரின் முகத்தில் பட்டது.

பல் உடைந்தது
இந்த பயங்கர தாக்குதலால், பூபதியின் பற்கள் உடைந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்ததும் மேடையில் அமர்ந்திருந்த திமுக சீனியர் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சோடா பாட்டில் வீச்சு
இந்த அதிர்ச்சி மறைவதற்குள், அந்த வாலிபர் தன் கையில் வைத்திருந்த சோடா பாட்டிலை பொன்முடியை நோக்கி வீசி எறிந்தார். பொன்முடி சுதாரித்ததால் அந்த பாட்டில் அவரது காலுக்கு அருகில் சென்று விழுந்தது.

தர்ம அடி
அதற்குள் அங்கிருந்த திமுக தொண்டர்கள் ஓடிச்சென்று அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை நைய புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்ததோடு, படுகாயமடைந்த கட்சி நிர்வாகி பூபதி மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications