மார்த்தாண்டம் அருகே நாளை அமெரிக்கா செல்லவிருந்த வாலிபர் பெட்ரோல் குண்டுவீசி கொலை
குமரி: குமரி மாவட்டத்தில் வேலைக்காக நாளை அமெரிக்கா செல்லவிருந்தவர் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருக்கும் கடந்தாங்கோடு, வாரியதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சஜு(23). ஏரோநாட்டிக்கல் டிப்ளமோ படித்துள்ள அவர் வேலைக்காக நாளை அமெரிக்காவுக்கு செல்லவிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று மாலை 5.30 மணிக்கு தனது பைக்கில் கழுவன்திட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சஜுவின் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் விழுந்தவுடன் காரில் இருந்து 6 பேர் கீழே இறங்கி வந்தனர்.
அதில் ஒரு நபர் சஜு மீது பெட்ரோல் குண்டை வீசினார். இதில் சஜுவின் பைக் தீப்பிடித்து எரிந்தது, அந்த தீ அவர் மீதும் பிடித்தது. உடனே அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அதற்குள் அந்த 6 பேரும் அவரை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஜு மீதான தீயை அணைத்தனர். உடனடியாக அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சஜு இறந்துவிட்டார் என்று கூறி குழித்துறையில் யாரோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இது குறித்து கழுவன்திட்டையைச் சேர்ந்த விஜயலால் என்பவர் மீது சஜு போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.
இந்த வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில் சஜு கொல்லப்பட்டுள்ளார். இதனால் விஜயலால் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. சஜுவும், விஜயலாலும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்து சில பிரச்சனைகளால் பிரிந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications