சென்னையில் மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து இளைஞர் பலி - தந்தை படுகாயம்
சென்னை பல்லாவரத்தில் மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார், அவரது தந்தை படுகாயமடைந்தார்.
சென்னை: பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவப்பிரகாசம் என்பவர் கழுத்தை பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவப்ரகாசத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவருடைய தந்தை சந்திரசேகர் மாஞ்சா நூல் அறுத்து படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் 4 பேர் மாஞ்சா நூல் பட்டத்திற்கு பலியாகி உள்ளனர். சென்னையிலும் மாஞ்சா நூல் பட்டம் விட ஏற்கனவே, தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதை கடுமையாக பின்பற்றவில்லை. மேலும், மாஞ்சா நூல் பட்ட விபத்திற்கு சிறிய வகை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், விபத்தை ஏற்படுத்தியவர்கள் சிறையில் இருந்து எளிதாக, உடனடியாக வெளியே வந்து விட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரில் தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்த 5 வயது சிறுவன் அஜய் கழுத்தை, மாஞ்சா நூல் பட்டம் பதம் பார்த்தது. இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்தான். இதனையடுத்து மாஞ்சா நூல் தடவிய பட்டம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் மாஞ்சாநூல் தடவிய பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சாநூல் சிவப்பிரகாசம் என்பவரின் கழுத்தை அறுத்து உயிரை பறித்துள்ளது. சிவப்பிரகாசத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரது தந்தை சந்திர சேகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாஞ்சா நூல் பட்டம் கழுத்தை அறுக்கும்போது அதிக ரத்த இழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்படுகிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் துண்டிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. விபத்து ஏற்பட்ட 5 முதல் 10 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் கூட காயம் அடைந்தவரை காப்பாற்றுவது கடினம். மாஞ்சா நூல் கழுத்தை அறுப்பது மட்டும் அல்ல கழுத்தை இறுக்கும்போது கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மாஞ்சாநூல் பட்டம் தயாரிப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை பாயுமா?
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications