காதலிக்குமாறு வற்புறுத்தியவரை குத்திக் கொன்ற இளம்பெண்ணின் தம்பி, பள்ளி மாணவர்கள் 3 பேர்
சென்னை: தனது அக்காவை காதலிக்குமாறு வற்புறுத்திய வாலிபரை குத்திக் கொன்ற மைனர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்தவர் குருநாதன்(19). பெயிண்டர். சென்னை, நெசப்பாகத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு வராததால் அவரை கண்டுபிடித்துத் தருமாறு அவரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார். மேலும் தான் புகார் அளிக்கவிருப்பது குறித்து குருநாதனின் நண்பர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ராமு(17), ராஜா(17)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய 10ம் வகுப்பு மாணவர்கள் திங்கட்கிழமை மதியம் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கூறுகையில்,
நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து குருநாதனை கொலை செய்து அவரின் உடலை மாங்காடை அடுத்த கொளப்பாக்கம், செங்கல் சூளை அருகே உள்ள முட்புதரில் போட்டுவிட்டோம் என்றனர்.
இதையடுத்து போலீசார் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் அந்த 2 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். மாங்காடு போலீசார் அந்த 2 பேர் தெரிவித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு குருநாதனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது.
ராமுவின் தூரத்து உறவினர் குருநாதன். குரு ராமுவின் அக்காவிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். குருவும், ராமுவின் அக்காவுக்கும் இடையே அக்கா, தம்பி உறவாம். அதனால் அவரை காதலிக்காதே என்று ராமு குருவை எச்சரித்துள்ளார். இந்நிலையில் குரு ராமுவின் அக்காவிடம் செல்போன் ஒன்றை கொடுத்து அதை சார்ஜ் போட்டு உன் தம்பியிடம் கொடு என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை ராமுவுக்கு குரு போன் செய்து அவர் இருக்கும் இடத்தை கேட்டு தெரிந்தார். இதையடுத்து ராமு கூறியபடி அவர் கொளப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அப்போது குரு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமுவை குத்த முயன்றார். ஆனால் ராமு அந்த கத்தியை பறித்து தனது நண்பர்களுடன் சேர்ந்து குருவை குத்திக் கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக ராமு, ராஜா, 9ம் வகுப்பு மாணவர் ஒருவர், 11ம் வகுப்பு மாணவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications