தர்மபுரி: மாணவிகளை பலாத்காரம் செய்ய முயன்ற காமுகன்... தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மர்மம்
தர்மபுரி: பள்ளி, கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று பஞ்சாயத்தாரிடம் தண்டனை பெற்று ஊரை விட்டு வெளியேறி இளைஞன், ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த வாலிபரின் பெயர் அர்ஜூனன்(22) என்பதாகும். இவர் தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்துள்ள, கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்தவர். கட்டிட மேஸ்திரி வேலை செய்யும் அர்ச்சுனன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதேபகுதியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதேபோல், சில நாளுக்கு முன்பாக வீட்டில் படுத்திருந்த கல்லூரி மாணவி ஒருவரையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர், ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கூறி பஞ்சாயத்து வைத்துள்ளனர். அப்போது, இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என ஊர் முக்கிய பிரமுகர்களிடம் அர்ஜுனன் வாக்குறுதி அளித்துள்ளார். இதயடுத்து, அர்ச்சுனனுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்து பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். மேலும், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஊரில் நுழையவும் தடை விதித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு அர்ஜூனன் சனிக்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அர்ச்சுனன் மாமன் முருகன் என்பவர் அபாராத தொகை, 25 ஆயிரம் ரூபாயை ஊர் பிரமுகர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பொம்மிடி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளப் பகுதியில், மர்மமான முறையில் அர்ஜூனன் இறந்து கிடந்தார். தகவலறிந்த, சேலம் ரயில்வே போலீஸார், அர்ச்சுனன் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications