சிங்கப்பூரில் இருந்து நகை கடையாக வந்த வாலிபர்... சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: உடலில் கொத்து கொத்தாக தங்க நகைகளை அணிந்து வந்த வாலிபரை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமான பயணிகளை குடியிரிமை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) என்பவர் கழுத்து, கைகளில் கொத்து கொத்தாக நகை அணிந்து கொண்டு வந்தார். அவர் அணிந்து வந்த நகைகளுக்கு எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. இதையடுத்து சிசுபாலனை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர் உடலில் அணிந்திருந்த நகைகள் மொத்தம் 290 கிராம். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சமாகும். நகைகளை பறிமுதல் செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், தங்க நகைகளை உடலில் அணிந்து வந்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படாது என்பதால் உடலில் போட்டு வந்தேன். இவற்றை கொண்டு சேர்த்தால் கணிசமான பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
யாருக்காக அவர் நகைகளை கடத்தி வந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications