ஈரோட்டில் பாஜகவின் ஜல்லிக்கட்டு முறியடிப்பு.. மாடுகளை விட்டு விட்டு மிரண்டு ஓடிய பாஜகவினர்
ஈரோட்டில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு இளைஞர்களால் முறியடிக்கப்பட்டது. 9 மாடுகளுடன் வந்த பாஜகவினர் மாடுகளை விட்டுவிட்டு மிரண்டு ஓடினார்கள்.
ஈரோடு: ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த பின்னர், ஈரோட்டில் பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்த முயன்றனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரும் இளைஞர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, பாஜகவினரின் ஜல்லிக்கட்டு முறியடிக்கப்பட்டது.
ஈரோட்டு வீரப்பன்பாளையத்தில் பாஜகவினர் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த 9 மாடுகளுடன் ஒன்று கூடினார்கள். தமிழ்நாட்டில் அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் இளைஞர்கள் பாஜகவினர் ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்திற்கு சென்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் பாஜகவினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராடி வரும் இளைஞர்கள் உறுதியாக இருந்து பாஜகவினரை எதிர்த்தனர். இதனால், தாங்கள் ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வந்த 9 மாடுகளையும் அங்கேயே விட்டுவிட்டு பாஜகவினர் மிரண்டு ஓடினார்கள். இதனையடுத்து, பாஜகவினரின் அரசு சார்பு ஜல்லிக்கட்டு முறியடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications