விபரீத ஆசை.. ஆப் மூலம் தகாத உறவுக்கு அழைப்பு.. காரில் பதறிய மத போதகர்.. தென்காசியில் ஷாக்!
தென்காசி: தென்காசி மாவட்டம் வல்லம் அருகே காரில் லிப்ட் கேட்டு செயின், பணத்தை வழிப்பறி செய்ததாக மத போதகர் அளித்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆப் மூலம் தகாத உறவுக்கு மத போதகரை அழைத்து 4 இளைஞர்கள் பணத்தை பறிமுதல் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது
தென்காசி மாவட்டம் வல்லம் என்ற பகுதியை சேர்ந்தவர் சார்லி அமல்சிங் (வயது 34). மதுரையில் உள்ள ஒரு தேவலாயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரான வல்லம் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சார்லி அமல்சிங் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான வல்லத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், காரில் சென்ற தன்னிடம் லிப்ட் கேட்பது போல ஏறி தன்னிடம் நகை மற்றும் கூகுள் பே மூலமாக பணத்தை பறித்து சென்றதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மத போதகரிடம் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பரவிய செய்தி வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குற்றாலம் போலீசார், மத போதகர் சார்லி அமல்சிங்கிடம் வழிப்பறி குறித்தும் நடைபெற்ற விதம் குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், குற்றாலம் அருகே உள்ள காசிமேஜபுரத்தை சேர்ந்த வைரமுத்து, மதுரையை சேர்ந்த மகேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மத போதகர் அளித்த புகாருக்கு மாறான தகவல்கள் கிடைத்தது.
அதாவது, வழிப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரையும் மதபோதகர் சார்லி அமலிசிங்கிற்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. கிரைண்டர் எனும் ஆப் மூலம் அவர்கள் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். சார்லின் சிங்கிடம் தகாத உறவில் ஈடுபடுவதற்காக நான்கு வாலிபர்களும் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர். இதை சார்லி அமல்சிங் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகே சார்லிஅமல் சிங் காரில் ஏறிய அந்த இளைஞர் வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றதோடு, சார்லி அமல்சிங்கை தாக்கி செயின், மோதிரம் உள்ளிட்டவற்றையும் பறித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
விபரீத ஆசையில் இது செயலி மூலமாக உறவுக்கு அழைக்கும் நபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவது சமீப காலமாக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பாதிக்கப்படும் நபர்கள், வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று புகார் கொடுக்க மாட்டார்கள் என்பதால், மோசடிகள் நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications