நெடுவாசல் சுடுகாட்டில் போராட்டம்.. ஹைட்ரோ கார்பன் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் சுடுகாட்டில் ஹைட்ரோ கார்பன் உருவபொம்மையை எரித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என்று 19 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்டை கிராமங்களான வாணக்கன் காடு, வடகாடு உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளன.

தமிழகம் முழுவதும், கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தவிர விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. திரையுலகினரும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தங்களது ஆதரவை நெடுவாசல் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். நெடுவாசல் சுடுகாட்டில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த ஹைட்ரோ கார்பன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications