For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலை 3 மணி ஸ்லாட்டுக்கு அதிகாலை 5 மணிக்கே குளித்துவிட்டு குவிந்த குடிக்காரர்கள்..திருப்பத்தூரில்..

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிற்பகல் 3 மணிக்கு ஸ்லாட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் குடிகாரர்கள் காலை 5 மணிக்கே குளித்துவிட்டு வரிசையில் காத்திருக்கின்ற சூழல் நிலவி வருகிறது.

Recommended Video

    முதல் 2 TASMAC Token-களை தட்டிச்சென்ற 2 Spain குடிமகன்கள்

    தமிழகத்தில் 45 நாட்களுக்கு பிறகு இன்றுதான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த மதுக்கடைகள் இயங்குவதற்கு அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.

    உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனாலும் நிதி நெருக்கடியை சமாளிக்க இன்று மதுக்கடைகள் திறப்பதில் அரசு உறுதியாகவே உள்ளது.

    6 அடி தூரம்

    6 அடி தூரம்

    மற்ற மாநிலங்களில் குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு வாங்கிய நிலையில் அவர்களின் கலெக்ஷன்களை தமிழகம் ஓவர்டேக் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக 6 அடி தூரத்திற்கு நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வரிசைகள்

    வரிசைகள்

    இந்த நிலையில் திருப்பூரில் குடைப்பிடித்து வருபவர்களுக்குத்தான் மதுபானம் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அது போல் அங்கு கட்டைகள் கட்டப்பட்டு அதில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த வட்டங்களில் ஒருவர் மட்டுமே நிற்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. "பல்வேறு தடைகளை தாண்டி" மது வாங்கும்வகையில் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    40 வயது

    40 வயது

    காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மது பானம் கொடுக்கப்படும். அது போல் 40- 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொடுக்கப்படும். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை வழங்கப்படுகிறது.

    டவல் போட்டுக் கொண்டு

    டவல் போட்டுக் கொண்டு

    இந்த நிலையில் திருப்பத்தூரில் ஒரு மதுபான கடை முன்பு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் தலைகளில் டவல்களை போட்டுக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் 40 வயதுக்குட்பட்டவர்களும் நிற்கிறார்கள். அதுகுறித்து கேட்டபோது பிற்பகல் 3 மணிக்குத்தான் கொடுப்பார்கள். இருந்தாலும் காலை 5 மணிக்கே குளித்துமுடித்துவிட்டு வந்துவிட்டோம். கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். இல்லாவிட்டால் 3 மணி வரை காத்திருக்க வேண்டியதுதான். அதில் என்ன தவறு என்றனர்.

    English summary
    Tasmac shops are opened in Tamilnadu. Drunkards are waiting in a queue despite of very heat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X